Homeசெய்திகள்தேர்தல் 2026காங்கிரஸில் பரபரப்பு…தலைவர் பதவியிலிருந்து ஹசீனா அதிரடி நீக்கம்…

காங்கிரஸில் பரபரப்பு…தலைவர் பதவியிலிருந்து ஹசீனா அதிரடி நீக்கம்…

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் களம் பரபரபாகியுள்ள நிலையில் , தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து வந்த ஹசீனா சையத், அந்தப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

காங்கிரஸில் பரபரப்பு…தலைவர் பதவியிலிருந்து ஹசீனா அதிரடி நீக்கம்…

we-r-hiring

தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஹசீனா சையத் அவர்கள் தனது பதவியில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஹசீனா சையத், அதற்கு முன்பு அகில இந்திய மகளிர் காங்கிரஸில் தேசிய செயலாளராகப் பணியாற்றியவர். கட்சியின் கருத்துகளை பொதுமக்களிடம் வலுவாக எடுத்துச் செல்லும் திறன் கொண்டவராகவும், குறிப்பாக தொலைக்காட்சி விவாதங்களில் தன்னுடைய தெளிவான மற்றும் திடமான நிலைப்பாடுகளால் பரவலாக அறியப்பட்டவராகவும் அவர் விளங்கினார்.

சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் இருந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென அவர் நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இந்த முடிவுக்குக் காரணம் என காங்கிரஸ் மேலிடம் விளக்கம் அளித்துள்ளது. எனினும், நீக்கத்திற்கான துல்லியமான காரணங்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த அதிரடி முடிவு தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்லாமல், மாநில அரசியல் சூழலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசீனா சையத்தின் நீக்கம், கட்சியின் உள்நிலை மாற்றங்களையும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்

MUST READ