பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம், முதலாய நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (50) இவர் தனது இரண்டாவது மனைவியுடன் பெங்களூர் விரைவு ரயிலில் ‘S5’ பெட்டியில் பயணம் செய்துள்ளார். அதே பெட்டியில் தேவி என்ற பெண் பயணியும் பெங்களூரிலிருந்து – சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.
ரயில் காட்பாடி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணி தேவியிடம் மதிவாணன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பயணி செல்போன் மூலம் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் ரயிலில் இருந்த மதிவாணனை இறங்கச் செய்து, அதன்பின்பு காட்பாடி இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்த போலீசார் மதிவாணனை உடனடியாகக் கைது செய்தனர். கைதான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி மதிவாணன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
குடி போதையில் தகராறு… நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியவர் கைது…
