Homeசெய்திகள்மாவட்டம்வாக்களிக்க சென்று திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து!! 4வயது சிறுவன் பலி!!

வாக்களிக்க சென்று திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து!! 4வயது சிறுவன் பலி!!

-

- Advertisement -

வானகரம் சுங்கச்சாவடி அருகே மதுரவாயல் தாம்பரம் சாலையில் விபத்து ஏற்பட்டது. அதில் 4 வயது சிறுவன் உயிர் இழப்பு, 4 மாத குழந்தை, தாய் உட்பட உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனா்.வாக்களிக்க சென்று திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து!! 4வயது சிறுவன் பலி!!திருவேற்காட்டை சேர்ந்த கிருபா மற்றும் அவரது குழந்தைகள் ரியான் பெலிக்ஸ்(4), ஜீவன் புவனேஷ்(4 மாதம்) ஆகியோர் வாக்களிக்க சொந்த ஊரான சிவகங்கை சென்று சென்னை திரும்பியுள்ளனர்.

சென்னை போரூர் அருகே வானகரம் சுங்கச்சாவடி பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்த போது வானகரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியது.இதில் திருவேற்காட்டை சேர்ந்த க்ளோரி அவர்களது 4 வயது மகன் ரியான் பெலிக்ஸ், 4 மாதக் குழந்தை ஜீவன் புவனேஷ் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். 6 பேரும் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 வயது சிறுவன் ரியான் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.

we-r-hiring

4 மாதக் குழந்தை உட்பட 5 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்து

MUST READ