Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்களாக தமிழக முதலமைச்சர் விஜய், உதயநிதி உறுதிமொழி ஏற்பு

சட்டமன்ற உறுப்பினர்களாக தமிழக முதலமைச்சர் விஜய், உதயநிதி உறுதிமொழி ஏற்பு

-

- Advertisement -

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடி இருக்கிறது. இதில் முதலாவதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய், சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்று கொண்டார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களாக உறுதிமொழி ஏற்றனர்.சட்டமன்ற உறுப்பினர்களாக தமிழக முதலமைச்சர் விஜய், உதயநிதி உறுதிமொழி ஏற்புஇதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். இவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இதனிடையே முதலமைச்சராக நேற்று பதவியேற்கும் போது, ‘ஆண்டவன் மீது ஆணையாக..’ என பதவியேற்றுக் கொண்ட விஜய், இன்று சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவியேற்கும் போது, ‘உளமார உறுதி கூறுகிறேன்..’ என கூறி உறுதிமொழி ஏற்று கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் “உளமாற” என்று கூறியே உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

“உளமாற” மறந்து ஜெயலலிதா பாணியில் பதவியேற்ற விஜய்!

we-r-hiring

 

 

MUST READ