நாகர்கோவில் அருகே பைனான்ஸ் நிறுவனம் தொடங்க அனுமதி பெற்று தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தக்கலை கீழக் கல்குறிச்சியைச் சேர்ந்த ரவிக்குமார், பைனான்ஸ் நிறுவனம் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான அரசு அனுமதியை பெற்றுத் தருவதாக வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் தெரிவித்துள்ளார். இதற்காக மொத்தம் ரூ.2 லட்சம் கேட்ட நிலையில், முன்பணமாக ரூ.1.75 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் பெற்ற பிறகு பைனான்ஸ் நிறுவனத்திற்கு தேவையான அனுமதியை பெற்றுத் தராமல் ஜெகதீஷ் காலதாமதம் செய்து வந்ததாகவும், பின்னர் தொடர்பை முற்றிலும் துண்டித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ரவிக்குமார் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதமே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த ஜெகதீஷை தொடர்ந்து தேடி வந்த நிலையில், தற்போது தக்கலை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெகதீஷ் தமிழக வெற்றிக் கழக பிரமுகராக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் புதிய திருப்பம் – ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத்துறை எதிர்ப்பு…
