முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வில் முதல் பாடலாக வந்தே மாதரம் பாட்ப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அமைசச்ரவை விரிவாக்கம் விழாவிலும் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்து 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
தமிழக அரசின் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழங்கப்பட்ட மரபு முக்கியத்துவம் மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இடம்பெற்றது அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், முதலில் “வந்தே மாதரம்” பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதுவரை தமிழக அரசு நிகழ்வுகளில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நிறைவில் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், இந்த மாற்றம் பல தரப்பினரிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தது. அப்போது கூட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழங்கப்பட்ட இடம் குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள், தமிழர் அடையாளத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இதனையடுத்து, தவெக அரசின் அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, எதிர்கால அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் அதே நடைமுறை தொடர்ந்திருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேசமயம், ஆளுநர் உள்ளிட்ட உயரிய அரசியல் பதவியாளர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் “வந்தே மாதரம்” மற்றும் தேசிய கீதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வரிசை பின்பற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தின் இடமாற்றம் தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மரபு, மாநில அடையாளம் மற்றும் அரசியல் நடைமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
நிலுவையில் உள்ள 4 லட்சம் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை
