Homeசெய்திகள்மாவட்டம்தவெக கூட்டணியில் சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்!

தவெக கூட்டணியில் சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்!

-

- Advertisement -

கிள்ளியூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்று இருப்தாகக் கூறி, காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் புகார் அளித்துள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தவெக கூட்டணியில் சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சபின், மாநில தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ராஜேஷ்குமாரின் வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும், தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை அல்லது மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

we-r-hiring

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ராஜேஷ்குமார் 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக சபின் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, மொத்தம் பதிவான 4,500 தபால் வாக்குகளில் சுமார் 2,000 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 169-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு மாலை 5.45 மணிக்குத் தொடங்கியதாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியிருந்ததாகவும், இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ள சபின், இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான ராஜேஷ்குமாரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளரே அதிகாரப்பூர்வ புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமே? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

MUST READ