தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியாதா என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் மூலம் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையில், தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமான பனைமரத்திலிருந்து பெறப்படும் கள்ளை ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் வினவியுள்ளது. 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கள் இறக்கிய விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கள் விற்பனை தொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் அதனை அனுமதிக்க ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் கேட்டது. மேலும், டாஸ்மாக் நிறுவனத்தைப் போலவே கள் விற்பனை மூலமும் அரசுக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனுடன், கள்ளின் மருத்துவ மற்றும் ஆரோக்கியப் பயன்கள் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காலை உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு – உணவு தரத்தை உறுதி செய்ய கோரிக்கை
