Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கனிமொழி கடும் கண்டனம்

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கனிமொழி கடும் கண்டனம்

-

- Advertisement -

முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அவசர அவசரமாகக் கைது செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கை:

அனிதா ராதாகிருஷ்ணன்

we-r-hiring

சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்:
தொகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, இவ்வளவு அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? முதலமைச்சர் ஜோசப் விஜய் தற்பொழுது சினிமா ஆக்‌ஷன் பாணியில் தமிழ்நாட்டில் ஒரு ‘போலஸ் ராஜ்ஜியத்தை’ நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அரசு ஒரு ‘Take Diversion’ (திசைதிருப்பும்) அரசாகச் செயல்படுகிறது.

தவெக எம்.எல்.ஏ மீதான புகாரில் மௌனம் ஏன்?:
திருவைகுண்டம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி ஒருவர், அங்குள்ள தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். தங்களை ‘தூயசக்தி ஆட்சி’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த அரசு, அந்தப் புகாரில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன்? சொந்தக் கட்சி எம்.எல்.ஏ மீதான வழக்கில் காட்டாத இந்த அவசரத்தை, அனிதா ராதாகிருஷ்ணன் கைதில் காட்டியதன் மர்மம் என்ன?

அரசின் மாற்றம் இதுதானா?:
தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்த வக்கில்லாத இந்த அரசு, அடுத்தடுத்த கட்சிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரைபேரம் மூலம் தங்கள் பக்கம் இணைப்பதிலேயே குறியாக உள்ளது. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அரசின் ‘மாற்றம்’ இதுதானா?

அவதூறு வழக்குகளும் அமைச்சர்களின் பேச்சும்:
வெறும் அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், தற்போதைய தவெக அரசின் அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும் பேச்சுக்களுக்கெல்லாம் இந்நேரம் எத்தனை பேரைக் கைது செய்திருக்க வேண்டும்? விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்து, காலத்தைக் கடத்திவிடலாம் என முதலமைச்சர் கணக்குப் போடுகிறார். அதிகார பலத்தால் எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் முதலமைச்சர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; “ஆணவம் எப்போதும் அழிவிற்கே வழிவகுக்கும்!” என்று அந்த அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளார்.

MUST READ