Homeசெய்திகள்மாவட்டம்ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?...

ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா? ​

-

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும் அவரது ஊழியர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.​ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?​புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் ரஹ்மத்நகரைச் சேர்ந்தவர் சுல்த்தான். இவருடைய மகன் பயாஸ் (31). இவர் சென்னை, திருச்சி மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனம் நடத்தி வருகிறார். ​இந்நிலையில், பயாஸ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சென்னை மற்றும் திருச்சியிலிருந்து துபாய்க்குப் பணப் பரிவர்த்தனை செய்ததில் பெருமளவில் முறைகேடுகள் (சட்டவிரோத பண பரிவர்த்தனை) நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

​​இதன் அடிப்படையில், இன்று காலை 8 மணி அளவில் 3 கார்களில் வந்த 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர், கோட்டைப்பட்டினத்தில் உள்ள பயாஸின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையைத் தொடங்கினர். ​மேலும், இந்த வழக்கின் தொடர்ச்சியாக பயாஸிடம் மேலாளராகவோ அல்லது முக்கியப் பணியிலோ வேலை பார்த்து வரும் ஆதில் (25) என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் பணம் அனுப்பப்பட்டதா அல்லது வரி ஏய்ப்பு ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில், அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த அதிரடி சோதனை தற்போதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை: வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

we-r-hiring

MUST READ