Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் தலையிட்டு தீர்க்க வேண்டும்! — இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் தலையிட்டு தீர்க்க வேண்டும்! — இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

-

- Advertisement -

ஆகஸ்ட் 28 முதல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு மு.வீரபாண்டியன் அறிக்கை
டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளில் தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் தலையிட்டு தீர்க்க வேண்டும்! — இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழல் குறித்தும், வரவிருக்கும் வேலைநிறுத்தம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

we-r-hiring

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
அரசு வருவாயில் பெரும் பங்களிப்பு:
ரூ.15 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனம், தற்போது ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கும் மேல் கலால் மற்றும் விற்பனை வரியாக அரசுக்குச் செலுத்துகிறது. அரசின் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கை ஈட்டித் தரும் ஊழியர்கள், 23 ஆண்டுகளாகப் பகுதிநேர ஒப்பந்தப் பணியாளர்களாகவே வைக்கப்பட்டிருப்பது தொழிலாளர் நலச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

சட்ட நடைமுறைகள் புறக்கணிப்பு: 1981-ஆம் ஆண்டின் பணி நிரந்தரத் தகுதி வழங்கல் சட்டத்திற்கு முரணாக டாஸ்மாக் நிர்வாகம் செயல்படுகிறது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ‘தமிழ்நாடு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டம்’ டாஸ்மாக் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பதை நிர்வாகம் மதிக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.

வேலைநிறுத்த அறிவிப்பு: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் காலிப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியூசி (AITUC), சிஐடியு (CITU) உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வரும் 28.08.2026 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.”

முதலமைச்சருக்கு வேண்டுகோள்
கொள்முதல் முனையில் நிதி கசிவைத் தடுத்து கூடுதல் வருவாய் ஈட்டிய அரசு, பணியாளர்களின் பாதுகாப்பான பணிச்சூழலிலும் அக்கறை காட்ட வேண்டும். எனவே, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு, டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிச் சுமுகத் தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டப்பேரவையில் குழாய் அடி சண்டை தேவைதானா? — பெ.சண்முகம் கொந்தளிப்பு இடதுசாரி உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு — சபாநாயகர் நடவடிக்கை குறித்து விமர்சனம்

MUST READ