Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை– சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை– சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

-

- Advertisement -

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிற்கு, அவர் சார்பில் இன்று (27.08.2026) சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை– சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தவெக தலைவர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை– சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

we-r-hiring

பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

இந்நிலையில், பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் அப்பகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

பதில் மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
சிறுவர்கள் பிரச்சாரம் குறித்த விளக்கம்: குழந்தைகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையெனக் கொண்டாலும், அதை மட்டுமே காரணமாக வைத்து ஒருவரின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது.

விதிகளின் சட்டப்பூர்வத்தன்மை: தேர்தல் நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என 2024 பிப்ரவரியில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதா என்பதை வழக்கு தொடர்ந்தவர்கள் நிரூபிக்கவில்லை. மேலும், தேர்தல் நடத்தை விதியை மீறுவது மட்டுமே வெற்றியை ரத்து செய்யப் போதுமான காரணியாகாது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் செலவு கணக்கில் முறைகேடு செய்தது மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை.

விவரங்கள் இல்லை: யார் எப்போது பணம் செலுத்தினார்கள், யார் செலவு செய்தார்கள் என்பன போன்ற தெளிவான விவரங்கள் தேர்தல் மனுவில் குறிப்பிடப்படவில்லை.

வழிபாட்டுத் தலப் பிரச்சாரம்: வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்தப் பலமான ஆதாரமும் இல்லை.

அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உள்நோக்கம் கொண்டவை என்றும் ஆதாரமற்றவை என்றும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் விஜய் தரப்பு, இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளது.

100 நாள் ஆட்சியிலேயே சந்தி சிரிக்கும் நிர்வாகம்! பிரதமர் நாற்காலி கேட்குதோ? விஜய்யை கிழித்து தொங்கவிட்ட வல்லம் பஷீர்!

MUST READ