spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்"- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!

“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!

-

- Advertisement -

 

Photo: Sachin Pilot Twitter Page

ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் முறைகேடுகளை முறையாக விசாரிக்கவில்லை என்றால் தனது போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!

கடந்த 2018- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சியமைத்ததில், முக்கிய பங்காற்றியவர் சச்சின் பைலட். ஆனால் முதலமைச்சராக அசோக் கெலாட் நியமிக்கப்பட்டதில் இருந்து இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வசுந்தரா ராஜே உடன் முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டு வைத்துள்ளதாகவும், அதனால் அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அவர் கண்டுக் கொள்வதில்லை என்றும் சச்சின் பைலட் குற்றம்சாட்டியிருந்தார்.

இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஐந்து நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்ட சச்சின் பைலட், அதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!

அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் முந்தைய பா.ஜ.க. அரசின் முறைகேடுகளை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சச்சின் பைலட்டின், இத்தகைய செயல்பாடுகள் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

MUST READ