
ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க வடிவத்தை அறிவியல் மற்றும் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று (மே 19) விசாரிக்கிறது.
முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் லிங்க வடிவில் கண்டெடுக்க பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்க அறிவியல் மற்றும் தடய அறிவியல் பரிசோதனைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
பின்னர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இந்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கு இன்று (மே 19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
‘மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்’- முழு விவரங்கள்!
அதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.