HomeBreaking Newsகாவிரி நீரை வழங்கவில்லை என கர்நாடகா மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு – 4...

காவிரி நீரை வழங்கவில்லை என கர்நாடகா மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு – 4 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிப்பு!

-

- Advertisement -

காவிரி விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.காவிரி நீரை வழங்கவில்லை என கர்நாடகா மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு – 4 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிப்பு!

இதனால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

we-r-hiring

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கடந்த அக்டோபர் 23-ம் தேதி முதல் அந்த உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கவில்லை எனத் தமிழக அரசு தனது முறையீட்டில் குறிப்பிட்டுள்ளது.காவிரி நீரை வழங்கவில்லை என கர்நாடகா மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு – 4 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிப்பு!

காவிரியில் இருந்து உரிய நீர் கிடைக்காததால், தமிழகத்தின் காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு நீர் பற்றாக்குறையால் சுமார் 4 லட்சம் ஹெக்டர் நிலங்களில் விவசாயம் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், காவிரி நீர் பங்கீடு விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

MUST READ