- Advertisement -
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்று 4-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றது. விசாரணையின்போது, இன்று நண்பகல் 12.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்நோக்கி இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
171.17 ஏக்கர் கோவில் நிலம்; 86 சென்ட் தர்கா நிலம் – நீதிமன்றத்தில் எழுந்த முக்கிய வாதம்!
