Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டாவில் கருகும் பயிர்கள்; உடனடியாக வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

டெல்டாவில் கருகும் பயிர்கள்; உடனடியாக வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

-

- Advertisement -

டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றிப் பயிர்கள் கருகி வரும் நிலையில், விவசாயிகளின் துயர் துடைக்கத் தமிழக அரசு உடனடியாக வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.டெல்டாவில் கருகும் பயிர்கள்; உடனடியாக வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்காமல் விட்டதால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சம்பா சாகுபடிக்குச் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், அதைக் கேட்காமல் செப்டம்பர் 1ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது டெல்டா பகுதிகளில் தண்ணீரின்றிப் பயிர்கள் கருகி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த மாதமும் அதற்கு முன்பும் அரசை எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்காமல் அரசு செயல்பட்டதன் விளைவாகவே விவசாயிகள் தற்போது துயரத்தைச் சந்தித்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஏற்கெனவே முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறி விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய பயிர்ச்சேதம் தொடர்பாக அரசு வெளிப்படையான கள ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் பாதிப்புகளை அரசியல் விளம்பரத்துக்குப் பயன்படுத்தாமல், அவர்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருகும் பயிர்கள்.. Silent Mode-இல் CM..! “விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல” – மு.க.ஸ்டாலின்..

MUST READ