
தி.மு.க.வின் இரண்டாவது ஊழல் பட்டியல் வரும் ஜூலை 09- ஆம் தேதி அன்று திட்டமிட்டப்படியே வெளியிடப்படும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை
ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், “அரசியலுக்காக தி.மு.க.வின் ஊழல் பட்டியலை வெளியிடவில்லை. அரசு ஒதுக்கும் நிதியில் 25% ஊழலால் வீணாகிறது; அதனை தடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாக உள்ளன. இதுவரை முதலீடுகள் எதுவும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. ஆடியோ விவகாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பலிக்காடா ஆக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
உறுதியான முடிவுகளை எடுக்க முடியாத படி, பாதுகாப்பற்ற மனநிலையில் முதலமைச்சர் உள்ளார். தி.மு.க.வின் இரண்டாவது ஊழல் பட்டியலை, திட்டமிட்டப்படி வரும் ஜூலை 09- ஆம் தேதி வெளியிட உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.


