spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!

-

- Advertisement -

 

அமைச்சர் - எம்.பி. நேருக்கு நேர் மோதல்! ஆட்சியருக்கு நேர்ந்த கதி!
ராஜகண்ணப்பன் நவாஸ் கனி

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்ட சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

we-r-hiring

“அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

இராமநாதபுரத்தில் நேற்று (ஜூன் 17) தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை நவாஸ் கனியின் உதவியாளர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், நவாஸ் கனி எம்.பி.யின் உதவியாளர் விஜயராமுவைக் கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி உடல்நிலை- அமலாக்கத்துறை ஆலோசனை!

அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. நவாஸ் கனி வருவதற்கு முன்பு அரசு விழா தொடங்கியதால் தகராறு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ