
சேலம் மாவட்டம், ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அ.தி.மு.க. தான். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பிரகாசமாக உள்ளது. கொள்கையின் அடிப்படையில் தான் ஒவ்வொரு கட்சியும் செயல்படுகிறது. ஊழல் புரிந்து கைது செய்யப்பட்டவரை அமைச்சராக வைத்திருப்பதே தவறு.

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா வெட்டு சம்பந்தி அசைவ திருவிழா!
சிறைக் கைதிக்கான நம்பர் அளிக்கப்பட்டவர் அமைச்சராகத் தொடர்வது மோசமான முன்னுதாரணம். கொள்கை அடிப்படையில் தான் கூட்டணி; அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை. தி.மு.க. தான் தற்போது அடிமைக் கட்சியாக செயல்படுகிறது. செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது.
செந்தில் பாலாஜி உடல்நிலை- அமலாக்கத்துறை ஆலோசனை!
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி தான் இந்தியாவில் நீட் தேர்வு வர காரணமாக இருந்தது. நீட் எதிர்ப்பில் அ.தி.மு.க. தான் முதன்மையான கட்சி. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் வரை போராடிய கட்சி அ.தி.மு.க. ஜனநாயக நாட்டில் அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.