
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், முதலில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் காவேரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா வெட்டு சம்பந்தி அசைவ திருவிழா!
வழக்குத் தொடர்பாக செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை அமர்வு நீதிமன்றம். உத்தரவிட்டது. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
எட்டு நாள் காவல் முடிந்து வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று மாலை 03.00 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 18) காலை 10.00 மணிக்கு காவேரி மருத்துவமனையின் அறிக்கையை வைத்து இ.எஸ்.ஐ மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளின் மருத்துவர்களிடம் அமைச்சரின் உடல்நிலை பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மருத்துவர்கள் தரும் தகவலின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை?
அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமா? எப்போது அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யலாம்? குறித்து மருத்துவர்களின் ஆலோசனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், மூன்று மருத்துவமனை மருத்துவர்கள் தரும் அறிக்கை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
வரும் புதன்கிழமை அன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சைச் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.