spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி...."- ராகுல் காந்தி கண்டனம்!

“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!

-

- Advertisement -

 

"ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்"- ராகுல் காந்தி பேச்சு!
Photo: ANI

மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம் நீடிக்கும் நிலையில், அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

we-r-hiring

செந்தில் பாலாஜி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதன்படி, வரும் ஜூன் 24- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 03.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில், மணிப்பூரில் நிலவும் தற்போதைய சூழல், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள், மணிப்பூர் மாநிலம் முழுவதும் அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய அறிவிப்பையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆளுநர் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!

அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மணிப்பூர் வன்முறை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் இல்லாத போது அனைத்துக் கட்சி கூட்டமா? 50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காக்கிறார். மணிப்பூர் வன்முறைத் தொடர்பாகக் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ