Homeசெய்திகள்க்ரைம்வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

-

- Advertisement -

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

திருவள்ளூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து  100 கிலோ வெடி மருந்து மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது
கைது செய்யப்பட்ட சசிகுமார்

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் அருகே பட்டறை கிராமத்தில் பள்ளத் தெருவை சேர்ந்த சசிகுமார் என்பவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக திருவிழா நிகழ்ச்சிகளுக்கு வீட்டில் நாட்டு பட்டாசுகள் தயாரிப்பதாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா அவருக்கு ரகசிய தகவல் வந்ததன் பெயரில் சிறப்பு படையினர்,  திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் உடன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது வீட்டில் நாட்டு பட்டாசுகள் அனுமதியின்றி தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது
மூலப் பொருட்கள்

இதனை அடுத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த 100 கிலோ வெடி மருந்துகள் மற்றும் அவற்றை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சசிகுமார் என்பவரை கைது செய்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில்,

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாசு தயாரிப்பதற்கு அனுமதி பெற்றிருந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு எந்த முறையான அனுமதியும் பெறாமல் பட்டாசுகளை தயாரித்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ