spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நண்பராக பழகியவரிடமே 7 லட்சம் மோசடி செய்த பெண்… போலீசாரால் கைது…

நண்பராக பழகியவரிடமே 7 லட்சம் மோசடி செய்த பெண்… போலீசாரால் கைது…

-

- Advertisement -

புதிதாக திரைப்பட நிறுவனம் துவங்கி நடிக்க வைப்பதாக கூறி தொழிலதிபரிடம் 7 லட்சம் ரூபாயை ஏமாற்றிய பெண் உட்பட இருவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனா்.நண்பராக பழகியவரிடமே 7 லட்சம் மோசடி செய்த பெண்… போலீசார் கைது…சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் பயாஸ் என்பவர் பெரிய மேட்டில் சொந்தமாக ஷூக்கடை நடத்தி வரும் நிலையில், அண்ணா நகரில் அழகு கலை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் ஆரிஃபா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரிஃபா அதே நிறுவனத்தில் பணியாற்றும் காமேஷ் என்பவரையும் அப்துல் ஃபயாஸிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தங்களுக்கு திரைப்படத் துறையில் அதிக நபர்களை தெரியும் எனவும் திரைப்பட நிறுவனம் துவங்க இருப்பதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி அப்துல் பாயாஸிடம் ஆரிஃபா மற்றும் காமேஷ் ஆகியோர் கேட்டுள்ளனர்.

we-r-hiring

இதனை நம்பிய அப்துல் பயாஸ் சிறுக சிறுக 7 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு திரைப்பட நிறுவனம் தொடங்காமல் மோசடி செய்தது தெரிய வந்ததை அடுத்து அப்துல் ஃபயாஸ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த ஆரிஃபா மற்றும் காமேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைவு

MUST READ