spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி விவகாரம்- தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க. உண்ணாவிரதம்!

காவிரி விவகாரம்- தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க. உண்ணாவிரதம்!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

காவிரி விவகாரத்தில் விவசாயிகளை தமிழக வஞ்சிப்பதாகக் கூறி, வரும் அக்டோபர் 16- ஆம் தேதி பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

we-r-hiring

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

இது தொடர்பாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசைக் கண்டித்து வரும் அக்டோபர் 16- ஆம் தேதி கும்பகோணம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவிரி தண்ணீர் திறக்கப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல் கண் துடைப்புத் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ தி.மு.க.வுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

MUST READ