spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!

-

- Advertisement -

 

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!
Video Crop Image

தருமபுரி அருகே சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

we-r-hiring

பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு 58 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, இன்று (அக்.30) அதிகாலை 05.00 மணிக்கு தருமபுரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகள் லேசான காயமடைந்தனர்.

இதில் இரண்டு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர்செய்தனர். அத்துடன், விபத்துக் குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ