spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசதானந்த கவுடாவின் அதிரடி அறிவிப்பால் பா.ஜ.க.வில் பரபரப்பு!

சதானந்த கவுடாவின் அதிரடி அறிவிப்பால் பா.ஜ.க.வில் பரபரப்பு!

-

- Advertisement -

 

சதானந்த கவுடாவின் அதிரடி அறிவிப்பால் பா.ஜ.க.வில் பரபரப்பு!
File Photo

முதலமைச்சர், மத்திய அமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சதானந்த கவுடா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

we-r-hiring

நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!

கர்நாடகா மாநிலத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் பா.ஜ.க.வின் சதானந்தாவும் ஒருவர். தற்போது பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, தேர்தல் அரசியலில் இருந்து விலக முடிவுச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். என்னுடைய 30 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் பா.ஜ.க. அனைத்தையும் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சதானந்த கவுடா, ஓராண்டு முதலமைச்சராகவும், நான்கு ஆண்டுகள் கட்சியின் தலைவராகவும், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஏழு ஆண்டுகள் மத்திய அமைச்சராகப் பணியாற்றி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலும் அதிகமாக ஆசைப்பட்டால் மக்கள் என்னை சுயநலவாதி என்று அழைத்து விடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சதானந்த கவுடா போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

ரூபாய் 45,000- க்கு கீழ் குறைந்த தங்கம் விலை!

எனினும், சதானந்த கவுடாவின் அறிவிப்பு, பா.ஜ.க. தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ