சென்னை அம்பத்தூரில் வேறானவர் கலைஞர்..!!விழுதானவர் தலைவர்.! என்கிற பெயரில் 2 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன ஸ்கேட்டிங் மைதானம், பூங்காவில் செயற்கை நீரூற்று, பாடி மேம்பாலம் அருகே பொது கழிப்பிடம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் பகுதி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 7க்கு உட்பட்ட பாடி கலைவாணர் நகர் 88ஆவது கல்வி நிலைக்குழு உறுப்பினரான ஜி.வி. நாகவல்லி பிரபாகரன் அவர்களின் மாமன்ற உறுப்பினர் அலுவலகமும், மாநகராட்சி பகுதிசெயற் பொறியாளர் அலுவலகம் சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 2வது நிழற்சாலையில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைக்க சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்கள் பி. கே.சேகர்பாபு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மர கன்றுகள் நட்டு வைத்து 88 வது வார்டில் பகுதியில் பணிபுரியும் 160 மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி,பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 10 வகையான மளிகை பொருட்கள் அமைச்சர்களால் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செய்வதால் கால் நூற்றாண்டை கடந்து திமுக ஆட்சியை எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது இதே அம்பத்தூர் பகுதியில் கடந்த ஆட்சி காலத்தில் திமுக அமைச்சர்கள் மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் 82% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் தற்போது நாடும் நமதே 40தும் நமதே வருகிற பாராளுமன்ற தேர்தலில் நமது தமிழக முதலமைச்சர் யாரை சுட்டிக்காட்டுகிறாரோ அவரே பிரதமராக இருப்பார் என்று பேசினார்.