Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வெங்காயத்தாள் சாதம் செய்வது எப்படி?

வெங்காயத்தாள் சாதம் செய்வது எப்படி?

-

- Advertisement -

வெங்காயத்தாளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, தைமின், கந்தக சத்து போன்றவை இருக்கின்றன. வெங்காயத்தாள் என்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், புற்றுநோயை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.

தற்போது வெங்காயத்தாள் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.வெங்காயத்தாள் சாதம் செய்வது எப்படி?தேவையான பொருள்கள்:

வெங்காயத்தாள் – ஒரு கட்டு
உதிரியாக வடித்த சாதம் – 2 கப்
வெண்ணெய் -ஒரு தேக்கரண்டி
இரவு முழுவதும் ஊற வைத்த பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 10 லிருந்து 12
சோயா சாஸ் – அரை டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 7 பூண்டு பல் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஊற வைத்த பட்டாணியை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள மிளகாய், பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகின்ற வரை நன்கு வதக்க வேண்டும்.

அதன் பின் வேகவைத்த பட்டாணி, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும். பின் அத்துடன் வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வதங்கிய பின் வடித்த சாதத்தை போட்டு சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.வெங்காயத்தாள் சாதம் செய்வது எப்படி?

இப்போது சுவையான வெங்காயத்தாள் சாதம் ரெடி. தேவைப்பட்டால் இந்த சாதத்தில் முந்திரிப் பருப்பு, நிலக்கடலை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுக்கலாம்.

MUST READ