ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம் தண்டவாளத்தை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்ததால் ரயில் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் மழை பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவானது. இந்நிலையில் நேற்று இரவும் கனமழை வெளுத்து வாங்கியதால் மீண்டும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக ஆவடி ரயில் நிலையப் பகுதி முற்றிலுமாக மழை நீரால் வெள்ளக்காடாக மாறியது. தண்டவாளங்கள் முற்றிலும் மூழ்கி ரயில்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில், தண்டவாதத்தில் சூழ்ந்த மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தற்போது வெள்ளநீர் வடிந்து ரயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகிறது.