ஆவடிஅரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 577 விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்.


சென்னை புறநகர் பகுதியானஆவடி, காமராஜர் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி உடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் கலந்து கொண்டு 577 மாணவியர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

முன்னதாக நடைபெற்ற பரதநாட்டியம், நடனம் ஆகிய கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அரசு பள்ளி மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த. நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர். உதயகுமார், பகுதி கழக செயலாளர் நாராயண பிரசாத், மண்டல குழு தலைவர் ஜோதிலட்சுமி நாராயன பிரசாத், மாநகர செயலாளர் சன் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


