ஆவடியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த 08-01-2024 இன்று முதல் 11-01-2024 வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி மத்திய அரசின் திண் ஊர்தி தொழிற்சாலை, மற்றும் இன்ஜின் தொழிற்சாலை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசின் திண் ஊர்தி தொழிற்சாலை மற்றும் இன்ஜின் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில் (NPS)-புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, (OPS)-பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி பல்வேறு தரப்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி முதற்கட்டமாக நான்கு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

JFROPS-( joint forum for Restoration of old pension scheme )-சார்பில் கடந்த 10-08-2023-அன்று புது டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பென்ஷனுக்கான உரிமை பேரணியில் சுமார் 4- லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர், இந்த நிகழ்வைக் குறித்து பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன, ஆனால் மத்திய அரசு இது சம்பந்தமாக எவ்வித தெளிவான பதிலும் அளிக்கவில்லை, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என அறிவித்தது.

01-01-2004-ற்கு பிறகு மத்திய மாநில அரசில் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு பென்ஷன் இல்லை என்பதும் 20 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் பென்ஷனாக பெரும் நிலை தங்கள் உழைப்பை அரசு களவாடுவதாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களின் மீது அக்கரை கொள்ளாத பிஜேபி அரசை கண்டித்து மீண்டும் போராட்டத்தை தீவிர படுத்த முடிவு செய்து இதற்காக, தொழிலாளர்களின் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி இந்த போராட்டத்தை இன்று தொடங்கி, 08-01-2024 முதல் 11-01-2024 வரை நான்கு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை எனில் மாபெரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அனைத்து தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றிணைந்து அறிவித்துள்ளனர்.


