spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிநீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் - பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!

நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!

-

- Advertisement -

ஆவடி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வரும் பகுதிகளை நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் வழங்கியதை அறிந்த பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் - பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!

we-r-hiring

சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ் நகர், தேவி கருமாரியம்மன் கோவில் பின்புறம் பத்துக்கு மேற்பட்ட தெருக்களில் 300 மேற்பட்ட குடியிருப்புகளில் 50 வருடங்களுக்கு மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இப்பகுதி நீர்நிலைப் பகுதி என வருவாய் துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு அங்கு இயங்கி வந்த சிறு கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் - பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!

தற்பொழுது அனைத்து குடியிருப்புகளையும் காலி செய்ய உத்தரவிட்டதை அறிந்து பாஜகவின் மாநில செயலாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பார்வையாளர் அனந்த பிரியா அவர்கள் காமராஜ் நகர், தேவி கருமாரியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள குடியிருப்பு வாசிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதியில் நீங்கள் நிரந்தரமாக குடியிருக்க அனுமதி வாங்கி தருவதாக உறுதி அளித்துச் சென்றார்.

நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் - பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!

50 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நீர்நிலை என்று அப்புறப்படுத்த முயற்சிப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது, இந்த ஆய்வில் பாஜக மாவட்ட நகர நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

MUST READ