
பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமானோர் செல்லத் தொடங்கியதால் சென்னையின் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு… ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்…
பொங்கல் பண்டிகையையொட்டி, வரிசையாக விடுமுறை வருவதையொட்டி, சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. சாலையில் ஏராளமான வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றனர்.
சென்னை விமான நிலையம் முதல் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என கார்கள் வரிசையாக அணிவகுத்து நின்றனர். வெள்ளிக்கிழமையில் பல்லாவரம் சந்தை கூடியதால் கூடுதல் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. மேலும், அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்
சென்னை போரூர்- ஆற்காடு சாலை, சர்வீஸ் சாலை, முகலிவாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றனர். நசரத்பேட்டை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம், திருமழிசை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றனர்.