
ராணிப்பேட்டை அருகே விரைவு ரயிலின் சக்கரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுவாமி பெருமாளிடம் மனு அளித்த பொதுமக்கள்!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து அரக்கோணம் வழியாக பீஹார் மாநிலம், பாரனிபுத்திரியாவுக்கு வாரந்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று (ஜன.22) மாலை ராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் அருகே வந்த போது, ரயிலின் இரண்டாவது பொதுப்பெட்டியில் இருந்த சக்கரங்கள் இறுகப் பிடித்ததால் புகை வந்துள்ளது. பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது.
சாமர்த்தியமாக செயல்பட்ட லோகோ பைலட் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தீயை அணைத்தனர். பின்னர், 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இது குறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.