spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவைத் தேர்தல் பணிகளுக்கு வந்தடைந்த துணை ராணுவப் படையினர்!

மக்களவைத் தேர்தல் பணிகளுக்கு வந்தடைந்த துணை ராணுவப் படையினர்!

-

- Advertisement -

 

மக்களவைத் தேர்தல் பணிகளுக்கு வந்தடைந்த துணை ராணுவப் படையினர்!

we-r-hiring

மக்களவைத் தேர்தல் பணிக்காக மேற்கு மாவட்டங்களுக்கு ரயில் மூலம் துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.

தலை வணங்குகிறேன்…. தமிழ் திரைத்துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய மஞ்சும்மல் பாய்ஸ்…

கேரளாவில் இருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்த துணை ராணுவப் படையினர் 276 பேரையும் கோவை மாநகர தேர்தல் பிரிவு காவலர்கள் வரவேற்றனர். மூன்று கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்த நிலையில், கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகராட்சிகளுக்கு தலா ஒரு கம்பெனி பிரித்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு கம்பெனியில் 92 பேர் வீதம் 276 பேர் வந்துள்ள நிலையில், கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றவுள்ள துணை ராணுவப் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு காவல்துறை பேருந்து மூலம் சென்றனர்.

அயலான் இயக்குநர் வீட்டில் நல்ல செய்தி… ரசிகர்கள் வாழ்த்து…

கோவை மாநகர காவல்துறை சார்பில் 400 வீரர்கள் கேட்கப்பட்டிருந்த நிலையில், 92 வீரர்கள் கொண்ட ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர், தற்போது வந்துள்ளனர். இவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை ஓய்வில் இருப்பார்கள். தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ