
பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (மார்ச் 17) தாம்பரம் – கடற்கரை இடையே காலை 11.00 மணி முதல் மதியம் 03.15 வரை 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
“பிரதமர் நரேந்திர மோடி விஷ்வகுருவா? மவுனகுருவா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (மார்ச் 17) 44 புறநகர் ரயில்கள் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக பிராட்வேயில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரத்திற்கு 60 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு 20 பேருந்துகளும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 10 பேருந்துகளும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு 30 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளும் என மொத்தம் 150 பேருந்துகள் இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
“கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்”- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
புறநகர் ரயில் சேவைகள் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்துச் செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.