ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் கூட்டணியில் உருவாகும் ‘சுழல் 2- THE VORTEX S2‘ வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிர் நடிப்பில் வெளியான வெப் தொடர் சுழல். கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், நிவேதிதா சதீஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த வெப் தொடர் வால்வட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சாம் சி எஸ் இசையிலும் உருவாகி இருந்தது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கியிருந்த புஷ்கர் காயத்ரி தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சுழல் 2 THE VORTEX S2 வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அமேசான் ப்ரைமில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


