சென்னை மணலியில் நான்கு நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீர் மரணம்

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ராஜேந்திரன் மணலி பகுதியில் நிகழ்ச்சிக்காக ஆட்கள் ஏற்றி வந்த போது திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதி தீ விபத்து ஏற்பட்ட நிலையில்
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சுந்தர்ராஜன் (28)என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேன் டிரைவர் ராஜேந்திரனை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சாத்தாங்காடு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் வேன் டிரைவர் ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்
இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்