spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

-

- Advertisement -

பிரதமர் மோடி தமிழையும், தமிழ்நாட்டையும் மிக்க மதிக்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றும் போது கூட திருக்குறளை பேசுகிறார், காசி தமிழ் சங்கமம் நடத்துகிறார், நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி உள்ளார். அந்தளவிற்கு தமிழக மக்கள் குறித்து பிரதமர் சிந்திக்கிறார்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்பிரதமர் தமிழையும், தமிழ்நாட்டையும் உயர்த்தி பேசுகிறார். அதே வேளையில் தமிழ்நாட்டின் ஒரு எம்.பி. செங்கோலை அவமானப்படுத்துகிறார். மன்னர்களை இழிவு செய்கிறார். அதனையும் பாஜக கண்டிக்கிறது.

we-r-hiring

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைக்கும் போது தமிழ்நாடு சட்டசபையில் செங்கோல் நிறுவப்படும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க போதிய நிதி வழங்கவில்லை என மத்திய அரசை குறைக் கூறி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேச்சு…

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்மு.க.ஸ்டாலின் இதுவரை மக்களுக்கு என்ன கொடுத்துள்ளார்? முதலமைச்சர் பொம்மை போல் உள்ளார். அவருக்கு பின்னார் குடும்பத்தினர் ஆட்சி செய்கின்றனர். DMK என்பது DRUG mafia, money mafia, corruption mafia ஆக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி ஜல் ஜிவன் திட்டம் மூலம் மக்களுக்கு தண்ணீர் வழங்குகிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் மதுவைத்தான் வழங்குகிறார். ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் போதை கலாச்சாரத்தால் மரண கோரதாண்டவம் நடந்துள்ளது.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழகம் சீரழிந்து வருகிறது. தனது சிறப்பை இழந்து வருகிறது. இளைஞர்களின் சக்தியை சிதைத்து வருகிறார். இளைஞர்கள் மதுவுக்கு எதிராகவும், திமுக ஆட்சிக்கு எதிராகவும் பெரிய போரை தொடங்க வேண்டும்.

பொற்கால ஆட்சி சென்று மதுவினால் ஆட்சி நடக்கும் போது தமிழ்நாட்டு பெண்களுக்கு கோபம் வரவில்லையா. பெண்கள் மதுவுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட வேண்டும். என அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

MUST READ