HomeBreaking Newsமுன் கூட்டியே பருவமழை தொடக்கம்… உற்சாகத்தில் மக்கள்…

முன் கூட்டியே பருவமழை தொடக்கம்… உற்சாகத்தில் மக்கள்…

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மே 13 ,14  தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன் கூட்டியே பருவமழை தொடக்கம்… உற்சாகத்தில் மக்கள்…
தமிழ்நாட்டில் மே 13-ம் தேதி 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் மே 13, 14-ல் இடி, மின்னலுடன் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், மே 14-ம் தேதி 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்குள் ஓரிரு இடங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
முன் கூட்டியே பருவமழை தொடக்கம்… உற்சாகத்தில் மக்கள்…
மே 27-ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பாண்டில் கேரளாவில் மே 27-ல் தென் மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், கேரளாவில் ஜீன் 1-ல் தென் மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் தற்போது முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மே 13-ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும்,

அந்தமான் பகுதியில் மே 4 வது வாரத்தில் தொடங்கும் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கு ஜி7 அழைப்பு …

MUST READ