spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஎதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'கிங்ஸ்டன்' பட டிரைலர்!

எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ‘கிங்ஸ்டன்’ பட டிரைலர்!

-

- Advertisement -

கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'கிங்ஸ்டன்' பட டிரைலர்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கிங்ஸ்டன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் தானே தயாரித்து, நடித்து, இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து திவ்யபாரதி, அழகம்பெருமாள், சேத்தன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது கடலில் நடக்கும் ஹாரர் திரில்லர் கதையாகும். அதாவது இந்தியாவின் முதல் கடல் பேய் படம் ஆகும். இப்படம் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் ‘ராசா ராசா’ எனும் பாடலும் ‘மண்ட பத்திரம்’ எனும் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலான இசையில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் காட்டப்பட்டுள்ளன. இந்த ட்ரெய்லர் கிங்ஸ்டன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. அத்துடன் இணையத்திலும் வைரலாகி வருகிறது. எனவே இப்படம் ஜி.வி. பிரகாஷுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ