தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை பெண்கள் பொது மக்களிடம் துண்டு பிரசுரமாக கொடுக்கும் நிகழ்வின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தை பிரசுரமாக மகளிர் கல்லூரி வளாகத்தின் வெளியே மாணவிகளுக்கும், பெண்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தவெகவினர் இன்று பிரசுரங்களை வழங்கி வந்தனர்.

அந்த வகையில் சென்னை தி நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் பொதுமக்கள் பெண்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.
இதனை பார்வையிடுவதற்காக வந்திருந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை முன் அனுமதி பெறாமல் கூட்டம் குடியதற்காக தி நகர் காவல் நிலைய காவலர்கள் அவரையும் அவர் உடன் இருந்தவர்களையும் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.


