Homeசெய்திகள்தேர்தல் 2026திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்

திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்

-

- Advertisement -

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளாா்.திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ்  மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது மேயர் பதவி மற்றும் 4-வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வழங்கினார். மேயரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதற்காக, ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில், துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் திமுக, காங்கிரஸ், அதிமுக கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மேயர் மகேஷின் ராஜினாமா குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். இதன் மூலம் மேயர் மகேஷின் ராஜினாமா முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

we-r-hiring

MUST READ