தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குபதிவு நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் இரு கிராமங்களில் பொதுமக்கள், தேர்தலை புறக்கணித்து போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாடானை அருகே உள்ள இலஞ்சியமங்கம் மற்றும் கிடங்கூர் கிராமங்களை இணைக்கு வகையில் ஆற்றுப்பாலம் அமைக்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் யாரும் இதுவரை வாக்களிக்கவில்லை. இதையடுத்து, அவர்களுடன் தாசில்தார், போலீசார் பேச்சுவாத்தை நடத்தி வருகின்றனர்.


அதேபோன்று, விழுப்புரம் வானூர் தொகுதி கோட்டக்குப்பம் 10,11-வது வார்டுக்கு உட்பட்ட 3,400 வாக்காளர்கள் தேர்தல் புறக்ணிப்பில் ஈடுபட்டனர். ஆதிதிராவிடர் மயானம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் வழக்கறிஞர் கார்த்திகேயன் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்.

இதனை தொடர்ந்து, நாங்குநேரி சட்பபேரவை தொகுதியில் பெரும்பத்து கிராம மக்கள் தேர்தலை பறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பத்து கிராமத்தில் சமீபத்தில் 2 பேர் படுகொலை செய்ப்பட்டனர். அச்சம்பவத்திற்கு நீதி கேட்டு தேர்தல் பறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ள நிலையில், தற்போது வரை வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வேங்கைவயல் சம்பவத்திற்கு நீதிவேண்டி அக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தின் நுழைவாயிலில் கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம் செய்த கிராமவாசிகள், எந்தக்கட்சியும் தங்களை அணுகி வாக்குகேட்டு பிரசாரம் செய்யவில்லை எனவும் கூறினர். மேலும் அரசியல் கட்சிகள் தங்களது கிராமத்தை புறக்கணித்துவிட்டதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
