Homeசெய்திகள்தேர்தல் 2026முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் – தொல்.திருமாவளவன் நம்பிக்கை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் – தொல்.திருமாவளவன் நம்பிக்கை…

-

- Advertisement -

திமுக தலைமையிலான மதசார்பற்ற  கூட்டணிக்கு பெரிய அளவிலான ஆதரவு இருப்பது களத்தில் காண முடிகிறது எனவே மீண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்புகிறேன் என தொல்.திருமாவளவன் நம்பிக்கையுடன் தெரிவித்தாா்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் – தொல்.திருமாவளவன் நம்பிக்கை…தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அளித்த தனிப்பேட்டி முக்கிய கவனம் பெற்றுள்ளது. தேர்தல் களத்தில் தாம் மேற்கொண்டு வரும் பயணங்களில், மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியும் உற்சாகமும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு வலுவான ஆதரவு நிலவி வருவது நேரடியாக உணரப்படுவதாகவும் அவர் கூறினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் அமைவது குறித்து தன்னம்பிக்கை உள்ளதாக தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக, இந்த தேர்தலில் அதே ஆட்சி மீண்டும் தொடரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது எனவும் கூறினார்.

we-r-hiring

அதேசமயம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் நிலையில், சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல என்றும், இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை உள்நோக்கத்துடன் மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இந்த மாற்றம் தேவையற்றது மட்டுமின்றி சந்தேகங்களை எழுப்புவதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் ஆணையம் போன்ற சுயாதீன அமைப்புகள் பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

இத்தகைய சூழலில், நடைபெற உள்ள தேர்தலில் பொதுமக்கள் தங்களின் தீர்ப்பை தெளிவாக வெளிப்படுத்தி, பாரதிய ஜனதா கட்சிக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் என்றும் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.

சாதி மதம் இல்லாத சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும் – அம்பேத்தகரின் 135வது பிறந்தநாளில் டி.ராஜா பேச்சு…

MUST READ