Homeசெய்திகள்தேர்தல் 2026சட்டமன்ற தேர்தல்: புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது

சட்டமன்ற தேர்தல்: புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது

-

- Advertisement -

புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு முதல்கட்டமாக தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9ந் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. வேட்புமனுக்களை வரும் 23ந் தேதி வரை தாக்கல் செய்யலாம்.சட்டமன்ற தேர்தல்: புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியதுமாநிலம் முழுவதும் 17 அரசு அலுவலகங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இந்த அலுவலகங்கள் முன்பு 200 மீட்டர், 100 மீட்டர் தூரம் கணக்கிடப்பட்டு குறியீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்களும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 24ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரீசீலனை நடக்கிறது. 26ந் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். ஏப்ரல் 9ந் தேதி புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மே 4ந் தேதி 5 மாநிலங்களுக்கும் ஓட்டு எண்ணிக்கை ஒரே நாளில் நடக்கிறது.

we-r-hiring

புதுச்சேரியில் தற்போது 9 லட்சத்து 48 ஆயிரத்து 977 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 4 லட்சத்து 45 ஆயிரத்து 761, பெண்கள் 5 லட்சத்து 3 ஆயிரத்து 76,. மாற்றுத்திறனாளி 13,803, 3ம் பாலினத்தவர் 140,  வெளிநாடு வாக்காளர்கள் 1665 அடங்குவர். இதுதவிர 327 சேவை வாக்காளர்கள் உள்ளனர்.

“அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி இல்லை”: தவெக திட்டவட்டம் – தனித்துப் போட்டிக்குத் தயார்?

MUST READ