Homeசெய்திகள்தேர்தல் 2026நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றும் முயற்சியில் பாஜக – ஆ.ராசா சாடல்

நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றும் முயற்சியில் பாஜக – ஆ.ராசா சாடல்

-

- Advertisement -

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்ற நோக்கில் மாநிலக் கட்சிகளை முறையே பலவீனப்படுத்தி, நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றும் முயற்சியில் பாஜக செயல்படுவதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளாா்.நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றும் முயற்சியில் பாஜக – ஆ.ராசா சாடல்

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் அரசியல் உற்சாகத்துடன் நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார்.

we-r-hiring

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தொடங்கிய இந்த பிரச்சார அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய ஆ. ராசா, பாரதிய ஜனதா கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்ற நோக்கில் மாநிலக் கட்சிகளை முறையே பலவீனப்படுத்தி, நாட்டின் அரசியல் அமைப்பை மாற்ற முயற்சி நடைபெறுகிறது” என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த முயற்சிகளைத் தடுத்து, அரசியலமைப்பு மதிப்புகளை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக பலவீனமடைந்து விடுவார் என்றும் ஆ. ராசா விமர்சித்தார்.

இந்த இறுதிக்கட்ட பிரச்சாரம் உதகை தொகுதியில் தேர்தல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த பிரச்சாரம், கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எழும்பூர் தொகுதி – ”ரவுடிகளை வைத்து பணப்பட்டுவாடா” அதிமுகவினர் மீது திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

MUST READ