Homeசெய்திகள்தேர்தல் 2026தேர்தல் 2026 -  விதிகளை மீறி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட தவெக பிரமுகர் கைது

தேர்தல் 2026 –  விதிகளை மீறி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட தவெக பிரமுகர் கைது

-

- Advertisement -

திருப்பத்தூர் தொகுதியில் வாக்களித்ததை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்ட இளைஞர் கைது.தேர்தல் 2026 -  விதிகளை மீறி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட தவெக பிரமுகர் கைது

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்கும் போது விதிமுறைகளை மீறி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

திருப்பத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தவெகவை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து தாம் வாக்களிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தாம் “விசில்” சின்னத்திற்கு வாக்களித்ததாக அந்த வீடியோவில் காட்டியதுடன், அதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வெளியிட்டதும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, வாக்குச்சாவடிக்குள் மொபைல் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்தது மற்றும் யாருக்கு வாக்களித்தது என்பதை வெளிப்படுத்தியது சட்டவிரோதம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து விதிமுறைகளை மீறியதாகப் புகார் பதிவு செய்து, சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாகவே, யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை சமூக வலைதளங்களில் வெளியிடுவது குற்றமாகும் என்றும், அதற்கு அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் வாக்காளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. வாக்களிப்பு என்பது ரகசியமான ஜனநாயக உரிமை என்பதால், வாக்குச்சாவடிக்குள் மொபைல் பயன்படுத்துதல், வீடியோ பதிவு செய்தல், வாக்களித்த விவரங்களை வெளியிடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

2026 தேர்தல் – திமுக வரலாறு மாற்றி அமைக்கப்படும் – கனிமொழி எம்.பி. உறுதி

MUST READ