Homeசெய்திகள்தேர்தல் 2026பொன்னேரி முதல் சோளிங்கர் வரை – ராகுல் காந்தியின் பரபரப்பான பிரச்சார பயணம்...

பொன்னேரி முதல் சோளிங்கர் வரை – ராகுல் காந்தியின் பரபரப்பான பிரச்சார பயணம்…

-

- Advertisement -

வருகின்ற சட்டமனற் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரச்சாரம் மேற்கொண்டுள்ளாா். மேலும் இவர், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பரப்புரை செய்யவுள்ள நிலையில் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னேரி முதல் சோளிங்கர் வரை – ராகுல் காந்தியின் பரபரப்பான பிரச்சார பயணம்...

we-r-hiring

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். முதல் கட்ட தேர்தல் பரப்புரைக்காக அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி (தனி) சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். இந்த நிகழ்வை நேரலையில் காண பொதுமக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொன்னேரியில் நடைபெறும் இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் மற்றும் திமுக, தேமுதிக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் பொன்னேரி தொகுதியில் துரை சந்திரசேகர் (காங்கிரஸ்), கும்மிடிப்பூண்டியில் கோவிந்தராஜன் (திமுக), திருத்தணியில் கிருஷ்ணமூர்த்தி (தேமுதிக), திருவள்ளூரில் வி.ஜி. ராஜேந்திரன் (திமுக), ஆவடியில் நாசர் (திமுக), பூந்தமல்லியில் கிருஷ்ணசாமி (திமுக) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை ஆகியோருக்கும் ஆதரவு கோரப்பட்டு வருகிறது.

இந்த பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டார்குப்பம் – பெருஞ்சேரி பகுதியில் நடைபெறுகிறது. கூட்டத்திற்காக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

ராகுல் காந்தி வருகையையொட்டி, சுமார் 900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின், அவர் ஹெலிகாப்டர் மூலம் இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெறும் மற்றொரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னம் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உரையாற்ற உள்ளார்.

இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை

MUST READ